பாதாளக் குழுக்களை ஒழிக்க விசேட பொலிஸ்



மிக விரைவாக வளர்ந்து வரும் பாதால உலக கூட்டத்தை ஒடுக்குவதற்கான பாரிய நடவடிக்கையொன்றை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று (5) முதல் முன்னெடுத்துள்ளது.
மேல் மாகாணத்தை மையப்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. பின்னர், இந்த நடவடிக்கை பாதால உலக குழுக்கள் செயற்படும் பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
பாதால உலகக் குழுக்களை ஒழிக்கும் பிரிவு என பெயரிடப்பட்டுள்ள இந்த விசேட பொலிஸ் பிரிவு இன்று முதல் அதன் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.