பெண்கள் அரசியலில் பங்கு கொள்ளுதலை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்



பெண்கள் அரசியலில் பங்கு கொள்ளுதலை ஊக்குவிக்கும் கலந்துரையாடல் கூட்டம் இன்று !
காரைதீவு நிருபர் சகா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனம், வேள்வி பெண்கள் அபிவிருத்தி முன்னணி, பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி ஆகியன இணைந்து பெண் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் திட்டமிடல் கலந்துரையாடல் கூட்டம் இன்று சனிக்கிழமை காரைதீவில் நடைபெறுகின்றது.

அக்கூட்டம் மனித அபிவிருத்தி தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தலைமையில் காரைதீவு மனித அபிவிருத்தி தாபன காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை 05ம் திகதி நடைபெறுகின்றது.


இதற்கு இப்பிராந்தியத்திலுள்ள பெண்கள் அமைப்பின் முக்கியத்தர்கள், ஆர்வமுள்ள பெண்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

உத்தேச 20வது திருத்தத்தினூடாக பெண்கள் 30 வீதம் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஊக்கப்படுத்துவதும், ஆர்வமுள்ள பெண்களுக்கு அரசியல் ஈடுபடுவது தொடர்பான அறிவினை ஏற்படுத்துவதும் இப்பயிற்சி செயலமர்வின் குறிக்கோளாக உள்ளது.

அதே போன்று எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்கள் ஆர்வத்துடன் போட்டியிடுவதற்கு இவ்வருட மகளிர் தினத்திற்கான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.