கொச்சிக்கடை மடம்பெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு



நீர்கொழும்பு கொச்சிக்கடை மடம்பெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 8.50 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
47 வயதான நிலந்த சம்பிக்க என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தயசாலையில் வைக்கப்பட்டுள்ளது.