16 வயது மாணவி மீது பாலியல் சேட்டை செய்த ஆசிரியருக்கு பிணை



அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்.

பரீட்சை மண்டபத்தில் வைத்து 16 வயது மணவியை பாலியல் சேட்டை செய்த சந்தேக நபரான ஆசிரியரை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்தசாமி ஒரு இலட்சம் ரூபா இரு சரீரப்பிணையில் விடுவித்தார்.

செவ்வாய்கிழமை (05) மன்றில் ஆஜர் படுத்திய போதே நீதிவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பாலமுனைப் பிரதேச பாடசாலை ஒன்றில்  திங்கடகிழமை (04) காலை முதலாம் தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தரம் 11 வகுப்பில் கல்வி பயிலும்  குறித்த மாணவியை  பரீட்சை மண்டபத்தில் வைத்து  பரீட்சை கடமையிலிருந்த ஆசிரியர் ஒருவர் பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றார் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் சந்தேக நபரான 41 வயதான ஆசிரியரை கைது செய்து மன்றில் செவ்வாய்க்கிழமை  ஆஜர் படுத்தினர்.