இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 44 இன்று மன்னார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலை செய்யப்பட மீனவர்கள் இன்று தமிழகம் திரும்பவுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

