தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘கம் உதாவ’ போன்ற அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசினால் மேற்கொள்ளப்படும் ‘யொவுன் பெரமுன’ மற்றும் ‘கம் உதாவ’ போன்ற வேலைத்திட்டங்கள் இதன்பின்னர் பிரதமர் ரணில் விகரமசிங்கவின் பூரண மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளன.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ‘கம் உதாவ’ வேலைத்திட்டத்தை தற்போதைய காலத்துக்கு பொருத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டு அதற்கான அனுமதியை அமைச்சரவை அண்மையில் வழங்கியது.
கடந்த காலங்களில் ‘கம் உதாவ’ வேலைத்திட்டத்துடன் தொடர்புபட்டு பணியாற்றியவர்களை இணைத்துக்கொண்டு தற்காலத்துக்கு பொருத்தமான முறையில் அதனை செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் இவை செயற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

