சிரியாவில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் ரஷ்யா கடும் தாக்குதல்



சிரியாவில் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும் அலெப்பே நகரில் ரஷ்யாவும், சிரிய படைகளும் இணைந்து கடும் தாக்குதல் நடாத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் நேற்று செவ்வாய்க் கிழமை மாத்திரம் ரஷ்யா மற்றும் சிரிய படைகள் இருபதுக்கும் மேற்பட்ட நகரங்கள் மீது வான் தாக்குதல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அப்பாவி பொதுமக்களின் குடியிருப்புக்கள் பல அளிக்கப்பட்டதுன், அவர்களின் சொத்துக்கள் பாரிய அளவில் அளிக்கப்பட்டன.
மேலும் குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகிய அதேவேளை, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களின் பலரின் நிலை கவலைக் கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.