விக்னேஸ்வரனும் மஹிந்தவும் இனவாதத்தை தூண்டுகின்றனர்



வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கை இணைப்பதற்கான சமஷ்டி பிரேரணையை நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரேரணைகளுக்கும், சமாதானத்தை சீர்குழைக்க முயற்சிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் மக்கள் விடுதலை முன்னணி தமது ஒத்துழைப்பை வழங்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீவி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாகவும், தெற்கில் மகிந்த தலைமையிலான குழுவும், இனவாதத்தை தூண்டுவதும் நாட்டில் மீண்டும் யுத்தத்திற்கு வழிகோலுவதாகவும் டில்வின் சில்வா தெரித்தார்.
வடக்கு – கிழக்கை தனிமைப்படுத்தும் யோசனையில், அங்குள்ள மக்களின் எந்த தேவைகளும் பூர்த்தியாக்கப்படப் போவதில்லை, இது நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் வகையிலேயே அமையும். எனவே வடக்கு – கிழக்கு இனவாதத்தை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்களுடன் இணைந்து செயற்படுவதே மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம் எனவும் இந்த ஊடகவியலளார் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.