(க.கிஷாந்தன்)
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பாதிப்படைந்துள்ள தமக்கு நேர்த்தியான முறையில் கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள், உமா ஓயாவின் புகுல்பொல நீர்த்தேக்கத்துக்கு அருகாமையிலுள்ள சுரங்க வழிக்கு முன்னால் 28.04.2016 அன்று வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 03 மணி நேரம் உமா ஓயாவின் புகுல்பொல பகுதியிலான வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
