வௌ்ள நிலவரத்தைப் பார்வையிட்ட பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்



வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆராய்ந்தார்.
பல நாட்களாக வௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் தொடர்பில் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார்.
இதேவேளை, வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட மக்களின் நிலையை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று ஆராய்ந்தார்.
இதன்போது பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மேலும் சில பகுதிகளை ஹெலிகொப்டரில் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பார்வையிட்டார்.