மத்திய வங்கி ஆளுனர் தனது அதிகாரத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாக, ஊழல் எதிர்ப்பு முன்னணி குற்றம்சுமத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த முன்னணியின் ஆலோசகரான கீர்த்தி தென்னக்கோனால் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி மேற்பார்வை திணைக்களத்தினால் தகுதியற்றவர் என கருதப்பட்ட லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் தலைவரை பாதுகாத்தமையில், மத்திய வங்கியின் ஆளுனரின் தலையீடு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் கவனம் செலுத்தி, லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் தலைவர் தொடர்பில் வங்கி மேற்பார்வை திணைக்களத்தின் ஆலோசனைகளை செயற்படுத்துமாறும் ஊழல் எதிர்ப்பு முன்னணி ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.


Post a Comment
Post a Comment