சிறுவர் விடயங்களில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்



சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது சில ஊடகங்கள் தமது இருப்பை மட்டுமே கவனத்திற்கொண்டு செயற்படுவதுடன், சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பாக கவனம் செலுத்துவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஊடகங்கள் சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (13) முற்பகல் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய சிறுவர் சபையை ஸ்தாபித்தல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் சிறுவர்கள் குறித்த சமூகத்தின் கரிசனை பெருமளவு குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சிறுவர்களைப் பாதுகாப்பது எல்லோருடையதும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், சவால்களுக்கு முகம்கொடுத்து வாழ்க்கையை வெற்றிகொள்ளும் விதம் தொடர்பாக ஜனாதிபதி பிள்ளைகளுக்கு இதன்போது விளக்கினார்.