கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலை வெடித்துச் சிதறியதனால் பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட முழு அளவிலான மற்றும் பகுதியளவிலான சேதங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய ஐந்து மத்திய நிலையங்கள் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சேதமடைந்த விடுகள் மற்றும் சொத்துக்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுத் தருவதற்கு அரசாங்கம் இந்த தகவல்களைச் சேகரிப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த வகையில், அவிசாவெல, புகொட, தொம்பே, ஹங்வெல்ல மற்றும் கொஸ்கம ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்த முறைப்பாட்டு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தீச் சம்பவத்தினால், சாலாவ முகாமைச் சுற்றியுள்ள 6 கிலோமீற்றருக்கு உட்பட்ட பிரதேசத்திலுள்ளவர்கள் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Post a Comment
Post a Comment