இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்டுள்ள இரட்டை குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 130க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
காராடா மாவட்டத்தின் மத்தியில் ஒரு உணவகத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
அதற்கு பின்னர், பாக்தாத்தின் வடக்கில் நிகழ்ந்த இரண்டாவது குண்டு தாக்குதலில், நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் நடைபெற்றிருக்கும் மிகக் கொடிய தாக்குதலான இவை இரண்டும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஃபலூஜா நகரை இராக் பாதுகாப்புப் படைகள் மீண்டும் கைபற்றிய ஒரு வாரத்திற்கு பிறகு நடைபெற்றுள்ளன.

