சட்ட விரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாடிய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு பேரையும் பிணையில் செல்ல தெல்தெனிய மாவட்ட நீதவான் எம்.எச். பாரிக்டீன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் வீதம் பணப் பிணையிலும், அத்துடன் இருவருக்கு ஒரு லட்சம் ரூபா சரீர பிணை இரண்டின் படியும் இவர்கள் செல்வதற்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சந்தேகநபர்களான, எஸ்.மொஹமட் சிராஜ், நலிந்த வீரதுங்க, சந்திரசேகரன் ஜயகாந்தன், லியனகே, சஞ்ஜீவ சமரநாயக்க மற்றும் நந்தகுமார் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு காலை 9 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் பன்வில பொலிஸுக்கு வருகை தர வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

