#பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் வெள்ளம்



இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பருவ மழைக்காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, மீட்பு பணிகளில் உதவுவதற்காக ராணுவத்தினருக்கு இரு நாட்டு அரசாங்கமும் அழைப்பு விடுத்துள்ளன.

பாகிஸ்தானில் இந்த வெள்ளப்பெருக்கில், வடக்கு மாவட்டமான சித்திரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் சித்திரல் மாவட்டத்தில் உள்ள உர்சூன் என்ற கிராமத்தில் உள்ள மசூதி மற்றும் அதிலிருந்த அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அணுக முடியாத தொலை தூரத்திலிருக்கும் குடியிருப்பில், வெளியேறுவதற்கான எச்சரிக்கை சரியான நேரத்தில் வழங்கப்பட வில்லை என செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்தது முப்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவில் உள்ளஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவுகளால் பல கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன மற்றும் தேசிய நெடுஞ்சாலை பாதியளவில் முடக்கப்பட்டுள்ளது.