31 வது #ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகின்றது #Rio2016



(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)

துவக்கவிழா இன்று  5, 2016 அன்று மரக்கானா விளையாட்டரங்கத்தில் இரவு 8 மணிக்குத் துவங்கி நடைபெறும்.
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், (2016 Summer Olympics), அலுவல்முறையில்31வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXXI Olympiad) அல்லது ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகத்து 5, 2016 முதல் ஆகத்து 21, 2016 வரை பிரேசிலின் ரியோ டி ஜனேரோமாநகரத்தில் நடைபெற உள்ள தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டுக்களாகும். போட்டிகளை நடத்தும் நகரமாக இரியோ டி செனீரோஅக்டோபர் 2, 2009இல் கோபனாவன்டென்மார்க்கில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 121ஆவது அமர்வில் அறிவிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புகள்


  • இது தாமசு பாக் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் நடத்தப்படும் முதல் ஒலிம்பிக் போட்டிகளாகும்.[
  • தென் அமெரிக்காவில் நடைபெற உள்ள முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளாக இது இருக்கும். முன்னதாக 1968ஆம் ஆண்டில்வட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் இலத்தீன் அமெரிக்காவின் அங்கமான மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது.
  • போர்த்துக்கேய மொழி பேசப்படும் நாடொன்றில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவதும் இதுவே முதல்முறையாகும்.
  • போட்டிகள் முழுமையும் நடத்தப்படும் நாட்டின் குளிர்காலத்தில் நிகழும் முதல் ஒலிம்பிக் கோடைக்கால போட்டிகளாகும். இதற்கு முன்னதாக 2000ஒலிம்பிக் போட்டிகள் தெற்கு அரைக்கோளத்தின் இளவேனில் சம இரவுநாளுக்கு 5 நாட்கள் முன்பாக செப்டம்பர் 15இல் துவங்கின.
  • இலத்தீன் அமெரிக்காவில் 1968க்குப் பிறகு நடத்தப்படும் இரண்டாவது ஒலிம்பிக் போட்டிகளாகும்.
  • தெற்கு அரைக்கோளத்தில் மூன்றாம் முறையாக நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளாகும்.[3]

விளையாட்டுப் போட்டிகள்[தொகு]
2016 கோடை ஒலிம்பிக்கில் 28 விளையாட்டுக்களில் 41 பிரிவுகளில் 306 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நீர் விளையாட்டுக்கள்
நீரில் பாய்தல் (8)
நீச்சற் போட்டி (34)
ஒருங்கிசைந்த நீச்சல் (2)
நீர்ப் பந்தாட்டம் (2)
வில்வித்தை (4)
தடகள விளையாட்டுக்கள் (47)
இறகுப்பந்தாட்டம் (5)
கூடைப்பந்தாட்டம் (2)
குத்துச்சண்டை (13)
சிறு படகோட்டம்
பனிச் சரிவாட்டம் (4)
குறுவிரைவோட்டம் (12)
மிதிவண்டி ஓட்டப்பந்தயம்
பிஎம்எக்சு (2)
மலையோட்டம் (2)
சாலை (4)
தடகளம் (10)
குதிரையேற்றம்
நடைப் பயிற்சி (2)
பல்திறன் நிகழ்ச்சி (2)
தாண்டுதல் (2)
வாள்வீச்சு (விளையாட்டு) (10)
வளைதடிப் பந்தாட்டம் (2)
காற்பந்தாட்டம் (2)
குழிப்பந்தாட்டம் (2)
சீருடற்பயிற்சிகள்
கலைநயம் (14)
சீரிசை (2)
குதித்தெழு மேடைப் பயிற்சி (2)
எறிபந்தாட்டம் (2)
யுடோ14]]
தற்கால ஐந்திறப்போட்டி (2)
துடுப்பு படகோட்டம் (14)
எழுவர் ரக்பி (2)
பாய்மரப் படகோட்டம் (10)
குறி பார்த்துச் சுடுதல் (15)
மேசைப்பந்தாட்டம் (4)
டைக்குவாண்டோ (8)
டென்னிசு (5)
நெடுமுப்போட்டி (2)
கைப்பந்தாட்டம்
உள்ளரங்க கைபந்தாட்டம் (2)
கடற்கரை கைப்பந்தாட்டம் (2)
பாரம்தூக்குதல் (15)
மற்போர்