பட்டதாரிகளின் நியமன வயதெல்லை பிரேரணை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்



கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 35 இலிருந்து 45 ஆக உயர்த்துவதற்குரிய பிரேரணை கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் கூட்டம் சபைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இன்று நடைபெற்றது.