2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, அமெரிக்காவில் 19 கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட 4 பயணிகள் விமானங்களில், இரண்டு நியுயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் மீது மோதி 3 ஆயிரம் உயிர்களை பலிவாங்கியது.இந்த தாக்குதலை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளை மாளிகையில், காலை 8.46 மணிக்கு அதிபர் ஒபாமா நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு டவர் பகுதியில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று மோதியது முன்பு இதே நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சம்பவம் அமெரிக்காவின் பெருநிலப்பரப்பில் மோசமான தீவிரவாத தாக்குதலின் தொடக்கத்திற்கான அறிவிப்பாக இந்த சம்பவம் நடைபெற்றது.
பின்னர், இரட்டை கோபுரம் இடிந்து விழந்த இடமான கிரவுண்ட் ஜீரோ பகுதியில், உயிரிழந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு நினைவு கூறப்பட உள்ளது.
இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகைள் ஆரம்பமாகின.
அதுமட்டுமின்றி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்பட இந்த சம்பவம் தூண்டுதல் அளித்திருக்கிறது.
மேலும், பாலி தீவு முதல் பிரஸெல்ஸ் வரை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட இந்த தாக்குதல் முக்கியமாக அமைந்தது.
