அமெரிக்கா பள்ளிவாயலுக்கு பெருநாள் தினத்தில் தீ வைப்பு?



ஓர்லாண்டோ இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி சென்று வந்த மசூதி மீது, தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சாத்தியக்கூறு பற்றி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஆட்சியாளர்கள் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திங்கள் கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னால் ஃபோர்ட் பியர்ஸில் இருக்கும் இந்த இஸ்லாமிய மையத்தை யாரோ நெருங்கி வருவதை கண்காணிப்பு காணொளி பதிவு காட்டுவதாக உள்ளூர் புனித லூசி வட்டத்தின் ஷெரீப் அலுவலகம் கூறியுள்ளது.
ஜூன் 12 ஆம் நாள் பல்ஸ் இரவு கேளிக்கையகத்தில் ஒமர் மாத்தீன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.