(அஷ்ரப் ஏ சமத்)
உள்ளுராட்சி சபைத் தோ்தல் காலதாமதவாதற்கு முதன்மைக் காரணம் உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணய விடயத்தில் இருதித் தீர்மாணம் எடுக்கமாமையிலேயே பிற்போடப்பட்டது. எதிா்வரும் ஒக்டோபா் மாதத்தில் எல்லை நிர்ணய இருதி அறிக்கை முடிவடைந்து விடும். அதனை உறுதிப்படுத்திய பின் அடுத்த கனமே தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க முடியும். என இன்று(7) உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சா் பைசா் முஸ்தபா அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் -
கடந்த ஞயிற்றுக் கிழமை குருநாகலில் ்நடைபெற்ற 65வது ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு
தலைவா் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இம்மாநாட்டினை வெகுவாக குறைத்து மதிப்பிட இருந்தவா்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே உள்ளது. அங்கு வருகை தந்த இலட்சக்கணக்கான ஆதரவாளா்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையின் கீழ் ஒன்று கூடியுள்ளனா். எதிா்வரும் தோ்தல்களில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி தனித்து பாரிய வெற்றியையீட்டி ஆட்சியை அமைக்கும். என எதிா்பாா்க்கப்படுகின்றது. . ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் இன்றும் இக் கட்சியிலேயே இருந்து வருகின்றாா். அவா் இதுவரை கட்சிக்கு வேறு கட்சி அமைப்பத பற்றியே கட்சியில் இருந்து விலகுவதாகவோ தெரிவிக்கவில்லை.
மலேசியாவில் எமது நாட்டின் உயா் ஸ்தாணிகர் அண்சாரை அந்த நாட்டில் தாக்கியமை பற்றி அரசாங்கம் தமது வருத்தத்தை அந்தநாட்டுக்கு தெரிவித்துள்ளது. . அவரை தாக்கியவா்கள் அந்த நாட்டுப் பொலிசாரினால் பிடிக்கப்பட்டுள்ளாா்கள். எனவும் அமைச்சா் பைசா் முஸ்தபா அங்கு தெரிவித்தாா்
