கல்ஹின்னை பிரதேச முஸ்லிம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு



கல்ஹின்னை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் (தக்கியா) பள்ளிவாசல் ஒன்றின் மீது சற்று முன்னர் கல்வீச்சுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.
நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் சிறிய மோதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்து. மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஊர் பிரமுகர்கள், அரசியல் வாதிகள் ஆராந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன