வேகக்கட்டுப்பாட்டை இழந்தோர் பலி



மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில், இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு காளிகோயில் வீதியைச் சேர்ந்த வி. ரதிதன் (வயது 17) மற்றும் கே.விதுஷன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்காக, ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த சென்றுகொண்டிருந்தனர்.
இதன் போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியருகில் இருந்த பனை மரத்தில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த இருவரும், மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.