சம்மாந்துறையில் சிறுவர் தினம்




சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை வருடாந்தம் நடாத்திவரும் சர்வதேச சிறுவர்தினவிழா நிகழ்வு இன்று 01ஆம் திகதி சனிக்கிழமை காலை பங்களாவடி ஜனாதிபதி விளையாட்டு சதுக்கத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது

சர்வதேச சிறுவர் தினநிகழ்வுடன்  முன்கூட்டியே சர்வதேச ஆசிரியர் தினம் மற்றும் 3கோடி 60இலட்சரரூபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள ஆசிரியர் மத்தியவள நிலையத்திற்கான அடிக்கல் நடு வைபவம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 இதில் முதல் நிகழ்வாக  மாணவர்களது சிறப்பு ஊர்வலம் பாண்ட் வாத்தியங்களுடன்  இடம்பெற்றது
இந் நிகழ்வில் 2015 -2016ஆம் ஆண்டுகளில் தேசியமட்டத்தில் சாதனை படைத்த 28மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்  அதேவேளை சாதனைபடைத்த  52 ஆசிரியர்களும் அதிபர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர் .

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும்
கௌரவ அதிதியாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் இந்நிகழ்வில்  ஆசிரியர்தின விசேட குறிப்புப்புத்தகமொன்றும் வெளியட்டுவைக்கப்பட்டது  ஆசிரியர்தினம் தொடர்பாக இலங்கைத்தமிழர்ஆசிரியர் சங்கத்தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா உரைநிகழ்த்தினர். நன்றியுரையினைப்  பிரதிக்கல்வப்பணிப்பாளர் டாக்டர் உமர்மௌலானா நிகழ்த்தினார்