அக்கரைப்பற்று கமு/அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியால மாணவன்,அக்கரைப்பற்று -5 இனைச் சேர்ந்த எம்.ஜே.அதீக் அஹமட், இம்முறை இடம்பெற்ற 5 ந்தர புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் ஆகக்கூடுதலான புள்ளிகள் பெற்று (187) மாவட்ட சாதனை படைத்துள்ளார். இவரது அயரா முயற்ச்சிக்கு, துணை நின்ற பெற்றோர்கள், ஆசிரியர் சிறாஜ் ஆகியோருக்கு எமது இணையத்தளம் இதயங் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம் 12 வருடங்களின் பின்னர் மற்றொரு மாவட்ட சாதனை இதுவாகும்..முன்னொரு காலத்தில் அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம் ஐந்தாம்தர புலமைப் பரீட்சையில் அதிகூடுதலான மாணவர்களை சித்தியடையச் செய்திருந்தது.அகில இலங்கை ரீதியிலும் தடம் பதித்ததுள்ளது.
இக்கல்லுாரியில் ஆரம்பக் கல்வியினைக் கற்ற மாணவர்கள் ஒழுக்கசீலர்களாத் திகழ்துடன் பல்வேறு துறைகளிலும் பரிணமித்துள்ளனர்.
இப்பாடசாலையினை வேறொரு பாடசாலையுடன் இணைத்து இதனை
இன்னுமொரு பாடசாலையின் கனிஸ்ட பிரிவாக்க முஸ்தீபுகள் அரசியல்வாதிகளால், அரங்கேற்றப்பட்ட சமயத்தில், அதனை இக்கல்லுாரியின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.மேலும், கொழும்பில் உள்ள பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து, பொது மக்கள் அக்கறை வழக்குகளைத் தாக்கல் செய்யவும் தொடங்கினர்.அதனால், அம்முயற்ச்சி கைவிடப்பட்டது. அக் கல்லுாரிக்கு பௌதீக வளங்கள் நிராகரிக்கப்பட்டும் வந்தது கசப்பான உண்மை.
பழைய மாணவர்களின் பங்களிப்புடன் இக் கல்லுாரி சிறப்பு மாணவர்களுக்கான அடைவு மட்டத்தை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றது.
இத்தகைய சிறந்த பெறுபேற்றைப் பெற பங்களிப்புச் செய்த பாடாசாலையின் நலன் விரும்பிகள்,அதிபர், ஆசிரியர் குழாம் உட்பட அத்தனை பேரையும், இத் தருணத்தில் வாழ்த்துகின்றோம்! #CEYLON24

