(SUHAIB)
அம்பாரை மாவட்டத்துக்கான அரச, அரச சார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகைமதிப்பு கணக்கெடுப்புச் செயலமர்வு இடம் பெற்றது.
★★★★★★★★★★★
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் இயங்கும், தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் நாடு தழுவிய ரீதியில் அரச மற்றும் அரச சார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான - 2016 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு இடம் பெறவுள்ளது.
அதற்கு முன்னோடியாக அம்பாரை மாவட்டத்துக்கான தொகைமதிப்பினை மேற்கொள்ளும் வகையில் தொகைமதிப்பு தொடர்பில் தமிழ் மொழி மூல இணைப்பு உத்தியோகத்தர்களாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு 2016.11.03 ஆம் திகதி வியாழக் கிழமை காலை 09.30 மணிக்கு அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.K.விமல நாதன் அவர்களின் தலைமையில் அம்பாரைக் கச்சேரியின் கூட்ட மண்டபத்தில் தமிழ் ழொழியில் இடம் பெற்றது. அதன் போது அவர்
சகல தொகைமதிப்பு இணைப்பு உத்தியோகத்தர்களும் பூரண ஒத்துழைப்பை நல்குமாறும் வேண்டிக் கொண்டார்.
அந்நிகழ்வினை அம்பாரை மாவட்ட புள்ளி விபர தலைமைபீட உத்தியோகத்தரான ஜனாப்.M.M.தையார் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தொகைமதிப்புக் கணக்கெடுப்பு சம்பந்தமான பூரண விளக்கங்கள் சகல தொகைமதிப்பு இணைப்பு உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
நிரந்தர, அமைய, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று சம்பளம் பெறும் அரச மற்றும் அரச சார்புத்துறையின் சகல உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் தொகைமதிப்பிற்குட்படுத்தப்படவுள்ளனர்.
தொகை மதிப்பீடானது 2016.11.17 ஆம் திகதி எதிர்வரும் வியாழக் கிழமை காலை 09.30 மணி முதல் 11.30 மணிவரையில் கடமையில் உள்ள சகல உத்தியோகத்தர்களும் உட்படுத்தப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

