(க.கிஷாந்தன்)
போடைஸ் பாதை கடந்த காலத்தில் உடைந்து போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில் பல தடைவைகள் இப்பிரதேச மக்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து நாங்கள் மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தனவுடன் பேசி இந்த பாதைக்கு 100 லட்சம் ரூபாவினை பெற்று இதனை அபிவிருத்தி செய்து திறந்து வைத்தோம்.
ஆனால் இன்று காலை ஒரு சிலர் வந்து நாங்கள் தான் இந்த பாதைக்கு பணத்தினை பெற்று அபிவிருத்தி செய்தோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பணம் பெற்ற அபிவிருத்தி செய்திருந்தால் இன்று தாராளமாக குறிப்பிட்ட அமைச்சரை அழைத்து வந்து பாதையினை திறந்து வைத்திருக்கலாம். இன்று பல அமைச்சர்கள் உள்ளார்கள் அவர்களிடம் பணம் பெற்று இந்த பாதையினை செய்து திறந்து வைத்திருக்கலாம்.
ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் வேறு ஒருவர் பெற்ற பிள்ளைக்கு பெயர் சூட்டாது அதனை தலைவர் தொண்டமான் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டவில்லை. அவர் எப்போதும் வந்து பாரத்து விட்டு முகப்புத்தகத்தில் படம் போடுபவர் அல்ல எப்போதும் மக்களின் பிரச்சினை தீர்க்க வேண்டும் என்று நினைப்பவர் என மத்திய மாகாண விவசாயம் கால்நடை மீன்பிடி தோட்ட உட்கட்டமைப்பு இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.
அட்டன் போடைஸ் பிரதான வீதியின் பாலம் கடந்த நவம்பர் மாதம் 22 ம் திகதி உடைந்து வீழ்ந்ததனை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இவ்வீதி மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன அவர்களின் நூறு இலட்சம் ரூபா செலவில் புனரமைத்து திறந்து வைக்கப்பட்டன.
இந்த வீதியினை திறந்து வைப்பதற்கு முன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதாரவாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் உரிமை கோரியதனால் அங்கு பதற்றநிலை உருவானது.
இந்நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னை ஆகியோர் அவ்விடத்துக்கு சென்று இப்பாதைக்கு யாரும் உரிமை கோர முடியாது. இதற்கு நாங்களும் இப்பாதையினை புனரமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்து அவ்விடத்தினை விட்டு சென்று விட்டனர்.
அதனை தொடர்ந்து மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன மற்றும் அமைச்சர் ரமேஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பனர்கள் ஆகியோர் வந்து பாலத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த பாலத்தினை செய்வதற்கு நாங்கள் தான் ஆவனஞ் செய்தோம். அப்போது மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன அமைச்சருக்கு நாங்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அவர் வேறு பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியினை நிறுத்தி விட்டு புதிய கெபினட் பத்திரம் போட்டு தான் இந்த பாதையினை செய்து கொடுத்தார். ஆகவே தான் அந்த அமைச்சரை கொண்டே இந்த பாதையினை திறந்து வைத்தோம்.
இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்கள் நாங்கள் செய்திருக்கின்றோம். நாங்கள் ஒரு போதும் நிதி வழங்கும் போது அந்த அமைச்சருக்கு கொடுக்காத இந்த அமைச்சருக்கு கொடுக்காத என்று சொல்பவர்கள் அல்ல யாருக்கு முடியுமோ நிதியினை பெற்று எமது மக்களுக்கு சேவையாற்றுங்கள். தோட்ட மக்களுக்கு என்னனென்ன தேவையோ அதனை எந்த அமைச்சரை பிடித்தால் செய்து கொள்ள முடியும் என்பதனை அறிந்து நாங்கள் செயப்பட்டு வருகின்றோம்.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன, இ.தொ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சத்திவேல், கணபதி கணகராஜ், பிலிப்குமார், முன்னாள் கல்வி அமைச்சர் அருள்சாமி, முன்னாள் பிரதி அமைச்சர் ஜெகதீஸ்வரன், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபைத்தலைவர் வெள்ளையன் தினேஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

