மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் சவுக்கடி பிரசேத்தில் புத்தாண்டினை வரவேற்று ஆலய முன்றலில் பலூன்ஊதி உடைத்து ஓடி விளையாடிக்கொண்டிருந்த பதினொரு வயதுச்சிறுவன் ஒருவன் படியில் தவிறிவழுந்து மரணமடைந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று 01.01.2017 அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தளவாய் விக்னேஷ்வரா வித்தியாலயத்தின் தரம் ஐந்து வகுப்பைசேர்ந்த ஜெயகரன் மதுஷன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் அருகிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனைக்காக கட்டப்பட்டிருந்த பலூன்களை தனது தோழர்களுடன் உடைத்து விளையாடிய பின்னர் வீட்டிற்குச் செல்லமுட்பட்டபோது படியில் இடறிவிழுந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து சற்று நேரத்தில் மூச்சையிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம் நஸிர் மற்றும் ஏறாவூர்ப் பொலிஸார் சம்பவ இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர். பிரேத பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில் இடம்பெற்றது.

