புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசரான பிரியசாத் டெப் நியமிக்கப்படுவதற்கு அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பரிந்துரை முன்வைத்துள்ளது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழு சபாநாயகர் கருஜயசூரியவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு கூடி புதிய பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பாக கலந்துரையாடியது.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக புதிய பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதம நீதியரசருக்கான வெற்றிடம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்தினால், அரசியல் வழிநடத்தல் குழுவிற்கு அறிவிக்கப்படுவதுடன், அதற்கமைய வழிநடத்தல் குழு கூடி அதுதொடர்பில் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைக்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மூவர் அடங்கிய அரசியலமைப்பு வழிநடத்தல் குழு நேற்றிரவு கூடி, சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப்பை புதிய பிரதம நீதியரசராக நியமிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

