கல்விக்கான மானியங்கள் ஒதுக்கப்படும் போது, முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்களை கல்வி அமைச்சே அடையாளம் காண வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் பொன் விழா நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி 1967 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஐ.எம்.ஆர். ஈரியகொல்ல தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரியின் ஆரம்பகால அதிபராக ஆர்.ஐ.டி.அலஸ் செயற்பட்டார்.
இன்று இடம்பெற்ற பொன் விழா நிகழ்வில் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில், கல்வி அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் பொன் விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

