அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கரையோரப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளித் தாக்கத்தினால் அப்பகுதியில் சில வீடுகள், வாடிகள் உள்ளிட்ட கட்டடங்களினதும் ஹசனாத் பள்ளிவாசலில் அமைந்துள்ள குர்ஆன் மதரஸாவினதும் கூரைகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை கிராம சேவகர் திரட்டி வருகின்றார். சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். -

