இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவருக்கு 37 1/2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ஆம் வருடம், குருநாகலை கொக்கரல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த சாரதிக்கு குருநாகலை மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி, கொக்கரல்ல பிரதேசத்தை சேர்ந்த குறித்த சாரதி செலுத்திச் சென்ற பேரூந்து பாதையை விட்டு விலகி சென்றதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
சம்பவத்தில் 11 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர் 44 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேர் பின்னர் மரணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

