வெல்லவாய பகுதியில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர், உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கை இரணுவ கோப்ரல் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
119 என்ற அவசர தொலை பேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, அண்மையில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களை வெல்லாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரான பெண், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளது.