இந்தியாவுக்கு யாத்திரைச் சென்று திரும்பிய இரண்டு இலங்கையர்களின் இரண்டு சடலங்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன. ஹக்மன வீதி, வலசமுல பிரதேசத்தைச் சேர்ந்த சமரசிங்க டேவிட் (வயது 62) மற்றும் மெல்சிறிபுர பிரதேசத்தைச் சேரந்த பி.டி.சோமாவதி (வயது 67) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான UL 1196 விமானத்தில் இருந்து நேற்று இரவு 7 மணியளவில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

