திருடர்கள் வௌியில் இருப்பதாக திருடனுக்கு கூற முடியாது



ஒரு திருடன் கைது செய்யப்பட்டால், மேலும் திருடர்கள் வௌியில் இருப்பதாக இன்னொரு திருடனுக்கு கூற முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். 

இன்று காலை கொழும்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், 

மக்கள் எதிர்பார்த்தது மோசடிக்காரர்கள் தண்டிக்கப்பட்டு சொத்துக்கள் கைப்பற்றப்பட வேண்டும் என்பதையே. எனினும் அலரி மாளிகையில் பாரிய மோசடிக்காகவே திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

ஜனவரி மாதம் 10ம் திகதி அரசாங்கம் அமைக்கப்பட்டு 50 நாட்கள் செல்லுமுன்னே பாரிய மோசடி இடம்பெற்றது. 

எமது நாட்டில் திருடப்பட்ட சொத்துக்கள் இருந்தால் திருடர் இல்லை. திருடன் இருந்தால் சொத்துக்கள் இல்லை. எனினும் மத்திய வங்கியின் திருடன் அர்ஜுன் மஹேந்திரன் இருக்கின்றார். அதேபோன்று திருடப்பட்ட சொத்தான அவருடைய மருமகனின் நிறுவனம் இருக்கின்றது. எனினும் தண்டனை இல்லை. 

பிரதமர் உட்பட அவரது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்த திருட்டை மறைப்பதற்காக பாரிய முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.