ஜனாதிபதி தலைமையில் நிலைபேறான இலங்கை



நிலைபேறான இலங்கை தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
விஷமற்ற ஒருவேளை உணவு, சுத்தமான குடிநீர், சுற்றாடல் பாதுகாப்பு என்பன இந்த வைபவத்தின் நோக்கமாகும்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கண்காட்சியும், பொருள் விற்பனைக்கூடங்களும் நிலைபேறான இலங்கை தேசிய வைபவத்தை அலங்கரிக்கவுள்ளன.
நிரந்தர இலங்கை கண்காட்சிக் கூடம், விஷமற்ற உணவு, பசுமை எரிசக்தி, சுகாதார முகாம், போஷாக்கு – உடல்நல ஆலோசனை, சிறுவர் – பெண்களுக்கான ஆலோசனைகள், கலைக் கண்காட்சிக்கூடம் என்பனவற்றை இங்கு பார்வையிட முடியும்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.