வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 10 வயதான சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (21) முற்பகல் தனது நண்பர்களுடன் கனகராயன்குளம் பகுதிக்கு சென்றிருந்த போதே சிறுவன் நீரில் மூழ்கியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குளத்திற்கு அருகில் நீர் நிரம்பியிருந்த குழியொன்றிலிருந்து சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தாயார் வெளிநாட்டில் தொழில் புரிகின்றமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment