(Kisaanthan)
நுவரெலியா – இரதல்ல பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறியொன்றே விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறி விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

