எதிர்கால சமூகத்தை போதைப்பொருளில் இருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தெல்தெனிய வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த கட்டடத் தொகுதியில், சத்திர சிகிச்சைப் பிரிவு, நோயாளர் விடுதிகள், தீவிர கண்காணிப்புப் பிரிவு, சட்ட வைத்திய பிரிவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
2013 ஆம் ஆண்டு இந்த கட்டத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அப்போதைய சுகாதார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்ததுடன், அவரது தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

