வேலையற்ற பட்டதாரிகளுடன் மனோ கணேசன்



அம்பாறை மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை தேசிய நல்லிணக்க சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன் நேரில் சந்தித்து அளவளாவி அவர்களது பிரச்சினைகளை நேற்று (திங்கள்) கேட்டறிந்தார் .
அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த காரைதீவு விபுலானந்தா சதுக்கத்தில் முகாமிட்டு தமக்கு அரசசேவையில் நியமனம் வழங்குமாறுகோரி மேற்படி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் .
நேற்று அம்பாரை மாவட்டத்திற்கு வருகைதந்த அமைச்சர் மனோகணேசன் தமிழ்முஸ்ஸீம் பட்டதாரிகள் ஒன்றிணைந்த போராட்ட முகாமிற்கு வருகைதந்து குறித்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் .
தாம் சுற்றுலாபயணியாக இங்கு வரவில்லையெனவும் அரசுக்குள்ளிருக்கும் ஒரு போராளியே தாமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் மனேகணேசன் வேலையற்ற தமிழ் முஸ்ஸீம் பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் தாம் அழுத்தமாக குரல் கொடுப்பேன் எனவும் உறுதியளித்தார் .
அரச வேலை வாய்ப்புக்களில் சிறுபான்மை சமூகங்களுக்காக இன விகிதாசாரம் பேணப்படவில்லையென கவலை வெளியிட்ட அமைச்சர் மனோகணேசன், இந்த புறக்கணிப்பிற்கு நிவாறணமாவது வடக்கு/கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் அரசவேவையில் நியமனம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கூறியதுடன், அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கும் இதை கொண்டுவருவதாக உறுதியளித்தார்.
யுத்தத்தினாலும் அனர்த்தங்களினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட வட கிழக்கு சிறுபான்மை தமிழ்முஸ்லீம் மக்கள் நல்லாட்சியரசு மலர முழு ஆதரவு வழங்கினரென கூறிய அமைச்சர் வடகிழக்கு வேலையற்ற தமிழ்முஸ்லீம் வேயைற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் அரச சேவையில் நியமனம் வழங்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. என்பதை ஜனாதிபதி பிரமதருக்கு வலியுறுத்தவுள்ளதாகவும் உறுதியளித்தார் .