-சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை - கிரிபத்கலை -குரான - வண்ணியவத்தை கிராமத்தில், நேற்று(26) இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்ட 31 பேரில் 10 பேரின் சடலங்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன.
மேலும் புதையுண்ட 21 பேரை தேடும் பணியில் அதிரடி படையினர் மற்றும் பிரதேச மக்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இக்கிராமத்தில், 228 பேர் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.
புதையுண்டு மீட்கப்பட்டவர்களின் சடலங்கள் காவத்தை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரண பரிசோதனைக்காக வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment