நேபாள ஜனாதிபதி கண்டி தலதா மாளிகையில்



தலதா மாளிகையில் நடைபெற்ற வெசாக்தின நிகழ்வுகளில் நேபாள ஜனாதிபதி பித்தியாதேவி பண்டாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஐ.நாவின் 14ஆவது சர்வதேச வெசாக்தின நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்த்தப்பட்டதுடன், இதன் இறுதிநாள் நிகழ்வுகள் கண்டி தலதா மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நேபாள ஜனாதிபதி கலந்து கொண்டு இறுதிநாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததோடு தலதா மாளிகையில் வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
ஐ.நா.வின் சர்வதேச வெசாக்தின நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டிருந்ததுடன் பல அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.