ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை



ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து புறப்பட்ட விமானத்தின் மூலம் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தர்மசேன கஹதவ தெரிவித்துள்ளார்.
பாதணிகளில் மிக சூட்சுமமாக மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரொயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஹெரோயின், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பரிசோதிக்கப்பட்டதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சந்தேகநபரையும், பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயினையும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தர்மசேன கஹதவ தெரிவித்துள்ளார்.