ஐ.நா. சர்வதேச வெசாக் விழா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்



ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் விழா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான சர்வதேச வெசாக் மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளது.
பௌத்த போதனைகளின் ஊடாக சமூக நீதி மற்றும் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுதல் என்ற தொனிப்பொருளில் சர்வதேச வெசாக் விழா இம்முறை நடைபெறுகின்றது.
இந்த விழாவில் உலக பௌத்த நாடுகளின் விசேட பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியும் விசேட விருந்தினராக இம்முறை சர்வதேச வெசாக் விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.