70ஆவது நிறைவுதினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற விசேட அமர்வு



நாடாளுமன்றத்தின் 70ஆவது நிறைவுதினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி, விசேட அமர்வொன்று இடம்பெறும் என, சபாநாயர் கரு ஜயசூரிய தெரிவித்தார். 
இந்த அமர்வுக்காக. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) இன் சபாநாயகர் அழைக்கப்படுவார் என்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகளும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.   
“1960 ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பில் ஏற்பட்ட தோல்வி, 1971, 1989களில், இளைஞர்கள் அமைதியின்மை மற்றும் 30 வருட யுத்தம் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும், 70 வருடங்களாக நாடாளுமன்றம் இயங்கிவந்தமை, பாராட்டத்தக்கது.  
எவ்வளவு பிரச்சினை வந்தாலும், நாட்டில் ஜனநாயகத்துக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடியதாக இருந்தது. சர்வதேச நாடாளுமன்றச் சங்கத்தின் தலைவர், இலங்கைக்கு வந்தபோது, இலங்கை நாடாளுமன்றம், மற்றைய நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்படுவதாக, அவர் தெரிவித்தார். உலகளவில், 70 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இலங்கை நாடாளுமன்றம் பயிற்சிகளை வழங்கியுள்ளது என்பது, பெருமை தரக்கூடிய விடயமாகும்” என்று அவர் மேலும் கூறினார்.