பிரின்ஸ் உதய பிரியந்த காலமானார்



பிரபல சிங்கள பாடகர் பிரின்ஸ் உதய பிரியந்த தனது 47 ஆவது வயதில் இன்று நண்பகல் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
பிரபலமடைந்த பல பாடல்களைப் பாடியுள்ள அவர், இலங்கை ரசிகர்களுக்கு பல அல்பம்களையும் விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.