பொறியியலாளர் மஜீத், நீர்ப்பாசன முன்னாள் பணிப்பாளர் நாயகம் காலமானார்



(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
பொறியியலாளர்.Y.அப்துல் மஜீத் காலமானார்.
இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முன்னால் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் Y.அப்துல் மஜீத் தனது 61 வது வயதில் இன்று(07-07-2017) மாலை சம்மாந்துறையில் மரணமடைந்தார்.

இவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்(பதில்), மேலதிக நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம், நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பண்டாரவளை பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவர் கொழும்பு றோயல் கல்லூரி, சம்மாந்துறை மத்திய கல்லூரி மற்றும் பேராதனைப் பொறியியல் பீடத்தினுடைய பழைய மாணவருமாவார்.

காலம் சென்ற பொறியியலாளர்.Y.அப்துல் மஜீத் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்.Y.அப்துல் அஸீஸ் அவர்களுடைய சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#Ceylon24  மறைந்த இந்தப் புத்தி ஜீவிக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.