அவசியம் ஏற்படுமாயின், புதியதொரு அரசாங்கத்தை, உடனடியாக ஏற்படுத்துவதற்கு, தன்னால் முடியும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து இலங்கை செயற்குழுக் கூட்டம் என்பன, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் என்றாலும், தூய்மையற்ற அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு தயாராக இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தூய்மையற்ற அரசாங்கமாக இருந்ததன் காரணமாகவே, கடந்த அரசாங்கத்திலிருந்து தாம் வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment