முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கைது



முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேகநபராக, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 03 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.