பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல்: 15 பேர் பலி



பாகிஸ்தானின் குவேட்டா நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியானதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை குண்டுதாரி சனநெரிசல் மிக்க சந்தைப்பகுதியில் குண்டை வெடிக்க வைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானிய இராணுவத்தினரை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பலியானோரில் இராணுவத்தினர் 8 பேரும் அடங்குகின்றனர்.
தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களில், குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ்ஐ.எஸ். அமைப்பு உரிமை கோருவதாக தெரிவித்துள்ளது.